வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (18:48 IST)

9 விக்கெட் விழுந்த நிலையில் திடீர் மழை.. இந்தியா-இலங்கை போட்டி ரத்தாகுமா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி மழை குறுக்கிட்டதால் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்த போது மழை வந்தது. 
 
47 ஓவர் முடிந்த நிலையில் இன்னும் மூன்று ஓவர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்குமா அல்லது போட்டி ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
இன்றைய போட்டி முக்கிய போட்டி என்பதால்  இன்று மழையால் தடைபட்டால் நாளை ரிசர்வ் தினத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran