ஐசிசி நடுவராக பணியாற்றிய ஆசத் ரவூஃப் காலமானார்: மாரடைப்பு என தகவல்!
ஐசிசி நடுவராக பணியாற்றிய ஆசத் ரவூஃப் காலமானார்: மாரடைப்பு என தகவல்!
ஐசிசி நடுவராக பணியாற்றிய ஆசத் ரவூஃப் என்பவர் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் அதன் பிறகு ஓய்வு பெற்றபின் நடுவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
2000 ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை 98 ஒருநாள் போட்டிகளிலும் 2007ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை 23 டி20 போட்டிகளில் அவர் நடுவராக பணிபுரிந்துள்ளார்
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மறைந்த ஆசத் ரவூஃப் அவர்களுக்கு வயது 66 என்பது குறிப்பிடத்தக்கது