புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (14:13 IST)

''ஜிம்மில் மாரடைப்பு''.. பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி !

raju srinivas
பிரபல  நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவர் தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் என்ற சீசனில் முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றார்.

நாட்டில் பிரபல  ஸ்டாண்ட் அப் காமெடில் நிகழ்ச்சி  நடிகராக அறியப்படும் அவர்,  இன்று ஜிம்மியில் உள்ள டீரெட்மில்லில்  உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு  நெஞ்சில் தீடீரென வலி ஏற்பட்டது.

இதனால் கீழே சரிந்து விழுந்த நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜிம்மின் பயிற்சியாளர் அவரை மீட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

அங்கு, நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தாவுக்கு சிபி ஆர் என்ற சிகிச்சை அளிக்கப்பட்டதியால்  உயிர் பிழைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து  அவருக்கு ஆஞ்சியோகிராம்பி கிச்சைக்கை அளிக்கப்பட உள்ளதாகவும், தற்போது ராஜு நல்ல நிலையில் இருப்பதாககவும் மருத்துவ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.