சிஎஸ்கே வீரர் இரண்டு போட்டிகளில் விளையாட தடை

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (23:57 IST)
சமீபத்தில் நடந்த ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீர்ர்களை ஏலம் எடுத்தது. அவர்களில் ஒருவர் அம்பதி ராயுடு. இவர் 2.2 கோடிக்கு ஏலம் போனார். இவர் தற்போது ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர், நடுவரின் தீர்ப்பை எதிர்த்ததால் இரண்டு போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பே இரண்டு போட்டிகளில் வீரர் ஒருவர் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :