Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மணி வியூ: பல வங்கி கணக்குகளுக்கு ஒரே பாஸ்புக்

Last Modified செவ்வாய், 30 ஜனவரி 2018 (23:59 IST)
இன்றைய டெக்னாலஜி உலகில் ஆப்ஸ்கள் என்று கூறப்படும் செயலிகள் இல்லாத துறையே இல்லை. அனைத்து துறைகளுக்கும் ஏகப்பட்ட செயலிகள் உருவாக்கப்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில் மணிவியூ என்ற ஆப் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

நீங்கள் எத்தனை வங்கி அக்கவுண்ட் வைத்திருந்தாலும் அத்தனை அக்கவுண்டின் பாஸ்புக் இந்த ஒரே செயலியில் உள்ளது. உங்கள் மொபைலுக்கு வரும் எஸ்.எம்.எஸ் மூலாம் உங்கள் வங்கிக்கணக்குகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, எந்த வங்கியில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதை இந்த செயலி காட்டுகிறது.

மேலும் உங்களுடைய வருமானம், அன்றாட செலவுகள் குறித்தும் இந்த செயலியில் நீங்கள் பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் இதுவொரு பர்சனல் டைரி போலவும் பயன்படுகிறது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் அல்லது மணி வியூ இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்


இதில் மேலும் படிக்கவும் :