ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

”கிரிக்கெட் ஆடணும் போல இருக்கு”…. தினேஷ் கார்த்திக் பேட்டிங் பார்த்து ஆசைப்படும் ABD!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகம் கவனம் ஈர்த்த ஒரு ப்ளேயராக RCB அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனை மிகவும் பாஸிட்டிவ்வாக தொடங்கியுள்ளது RCB அணி. இதுவரை நடந்த 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த முறை RCB அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய தூணாக இருப்பவர் தினேஷ் கார்த்திக். கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியில் புகுந்து விளாசுகிறார். இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அவுட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கைப் பாராட்டியுள்ள ஆர் சி பி அணியின் ஆலோசகரும் முன்னாள் RCB வீரருமான ஏ பி டிவில்லியர்ஸ் “அவரு விளையாடறத பாத்து மறுபடியும் விளையாடனும்குற ஆச வந்துடுச்சு” எனக் கூறி பாராட்டியுள்ளார்.