செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (12:59 IST)

’RCB கோப்பையை ஜெயிக்குற வரை கல்யாணம் இல்ல’… மைதானத்தில் கவனம் ஈர்த்த பெண்!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெண் ஒருவர் தனது வித்தியாசமான போஸ்டரால் கவனம் பெற்றுள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வரும் RCB அணி கடைசி வரை போராடி தோற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் மைதானத்துக்கு வந்திருந்த RCB ரசிகை ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அந்த ரசிகை கையில் வைத்திருந்த பதாகையில் ‘ஆர் சி பி கோப்பையை வெல்லும்வரை கல்யாணம் செய்யப்போவதில்லை’ என எழுதியிருந்தார். இதையடுத்து அவர் கவணம் பெறவே பல ரசிகர்கள் ‘வாழ்க்கையில் மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கிறீர்கள்’ எனக் கூறிவருகின்றனர். ஐபிஎல் தொடரில் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்தாலும் RCB இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.