புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:46 IST)

நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி பெண்

இந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா பாண்டே என்ற மாற்றுத்திறனாளி பெண்மணி மெக்ஸ்சிகோவில் நடைபெற்ற உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 
காஞ்சனமாலா பாண்டே(26) நாக்பூரைச் சேர்ந்தவர். பார்வை குறைபாடுடைய இவர் ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். மெக்ஸிகோவில் நடைபெற்ற 200 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை  காஞ்சனமாலா பெற்றுள்ளார்.
 
ஊனத்தை ஒரு பிரச்சனையாக கருதவில்லை என்றும் தன்னுடைய விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே இந்த வெற்றிக்கு காரணம் என காஞ்சனமாலா பாண்டே கூறியுள்ளார்.