1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2017 (07:20 IST)

தரையில் அமர்ந்து குறை கேட்ட சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டர்

171 ஆண்டுகால சேலம் மாவட்ட வரலாற்றில் இப்போதுதான் முதன்முதலாக பெண் கலெக்டர் ரோஹினி பதவியேற்றுள்ளார். மதுரை மாவட்டத்தின்  கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த இவர் சேலம் மாவட்டத்தின்  கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்க பாடுபடப்போவதாக ரோகிணி தெரிவித்துள்ளார்



 
 
இதுவரை இருந்த கலெக்டர்களிடம் மாற்றுத்திறனாளிகள் கஷ்டப்பட்டு படியேறு மனுக்களை கொடுத்திருந்த நிலையில் கலெக்டர் ரோஹினி அவரே தரைத்தளத்தில் இறங்கி வந்து மனுக்களை பெற்று கொண்டார்/
 
அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளை நாற்காலியில் உட்கார வைத்து அவர்கள் முன் தரையில் அமர்ந்து குறை கேட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மக்கள் சேவை செய்யும் உண்மையான கலெக்டர்களும் உள்ளனர் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது