மழை குறுக்கிடு இந்தியாவுக்கு சாதகமாகுமா?

Test Match
Last Updated: ஞாயிறு, 7 ஜனவரி 2018 (15:49 IST)
தென் ஆப்பரிக்க - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
 
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பரிக்க அணி 286 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாறியது. 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிஸை தொடங்கிய தென் ஆப்பரிக்கா அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் குவித்தது. இன்றைய மூன்றாவது நாள் மழையால் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மழையின் பாதிப்பு இந்திய சாதகமாக அமையுமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :