Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கெத்து காட்டிய ஹர்திக் பாண்டியா: 209 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!!

Last Updated: சனி, 6 ஜனவரி 2018 (21:33 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 286 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் களமிறங்கிய இந்தியா அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 11 ஓவரில் 28 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. இன்றைய 2 வது நாள் ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.


இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 11 ரன்னிலும், அஸ்வின் 12 ரன்னிலும், சகா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கந்தனர். இந்தியா 92 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஜோடி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது. ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த புவனேஸ்வர் குமார் நிதானமாக விளையாடினார்.


86 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 93 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த பும்ரா 2 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 73.4 ஓவரில் 209 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் 77 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :