வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (17:37 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 172 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரை முப்பத்தி ஒன்பதாவது போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா அணி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ரானா 37 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்துள்ளனர்
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் ஹசில்வுட் மற்றும் ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டது
 
இந்த நிலையில் 172 என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் சில நிமிடங்களில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை பொறுத்தவரை ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், மொயின் அலி என எட்டு பேட்ஸ்மேன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது