வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. கட்டுரைகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (13:04 IST)

ஆசியக்கோப்பை இறுதிபோட்டி: இந்தியா vs வங்கதேசம் சில புள்ளிவிவரங்கள்

துபாயில் இன்று நடக்கும் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போட்டிகளைப் பற்றி சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

வங்கதேச அணி 1986-ல் ஒருநாள் விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்தியாவுடன் 34 முறை ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா 28 போட்டிகளிலும் வங்கதேசம் 5 போட்டிகளும் வென்றுள்ளது. ஒரு போட்டியின் முடிவு தெரியவில்லை. இந்தியாவின் வெற்றி சதவீதம் 84%.

இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்னாக இந்தியா 2011-ல் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் 370 ரன்களை சேர்த்துள்ளது. வங்கதேசத்தின் அதிகபட்ச ஸ்கோர் 307.
குறைந்தபட்ச ரன்னாக 2014-ல் வங்கதேசம் 58 சேர்த்துள்ளது. இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் 105 ரன்களாகும்.

அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் வீராட் கோஹ்லி முதல் இடத்தில் உள்ளார். அவர் 11 போட்டிகளில் விளையாடி 654 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது சராசரி 81.

வங்கதேசத்தின் மஷ்ரஃபே மொர்ட்டஸா அதிக விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவர் 18 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அதிகப்போட்டிகளில் விளையாடிவர் பட்டியலில் வங்கதேசத்தின் முஷ்புஹீர் ரஹிம் முதல் இடத்தில் இடத்தில் உள்ளார். அவர் 20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் எம் எஸ் தோனி உள்ளார்

இவ்விரு அணிகளுக்கு இடையிலான நடைபெற்ற போட்டிகளில் எல்லா வகையிலும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா அணி சொதப்பாத பட்சத்தில் வெற்றி இந்தியாவின் கையிலே உள்ளது.