1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

இந்த கிழமையில் கட்டாயம் இதை தவிர்க்கவேண்டும் அவை என்ன...?

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4-5 மணி நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?
நமது வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்து இருக்க, வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
 
வீட்டில் செல்வத்தை அதிகரிக்க சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம் மற்றும் ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க  வேண்டும்.
 
செய்யக் கூடாதவை:
 
ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்காமல், இருவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்க  வேண்டும்.
 
குத்து விளக்கை தானாக அணைய விடக் கூடாது, ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
 
நம் வீட்டில் உள்ள வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவைகளில் உட்காரக் கூடாது.
 
வீட்டை பெருக்கும் போது, அந்த குப்பைகளை  இரவில் வெளியே கொட்டக் கூடாது.
 
வீட்டில் விளக்கு ஏற்றிய பின் பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
 
வீட்டில் சாமிக்கு பூஜை செய்யும் போது, ஈரத் துணியை உடுத்திக் கொண்டு பூஜை செய்யக் கூடாது.