வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சனீஸ்வர தோஷம் விலக சித்தர் கூறும் வழிமுறைகள்...!

மனிதர்கள் வழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமான வாழ்க்கையாக மாற்றுவதற்காக சித்தர்களாலும் முனிவர்களாலும் ரிஷிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த தெய்வீக கலைகள்தான் மண், மந்திரம்  அவஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.
இவை ஜோதிடம். மந்திரம் மருத்துவம் எனப்படும். இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம் உடல் வழ்க்கையில் எற்படும்  துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றது.
 
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவகிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்திரம்  வலியுறுத்துகிறது. 
 
நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு, கேது சனி ஆகும், இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவாந்தான்.
 
சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். இறைவனாகிய சிவபெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான்  சனீஸ்வரபட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார்.
 
பனிரெண்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் எழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட  சனி, அஷ்டம சனி போன்ற பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி, பணமுடக்கம் வம்பு சண்டை விரக்தி, தொழில்முன்னேற்றமின்மை, எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை  மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள்.
 
சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரகங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை அபிஷேகம்  செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பவர்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள்  வகுத்துள்ளனர்.