திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By
Last Updated : செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (12:06 IST)

பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்

பற்களில் இருக்கும் வெண்மை கூட  ஒருவரது ஆளுமையின் திறனை சொல்லும். முறையில்லாத உணவு பழக்கங்களால் பற்களில் காணப்படும் எனாமல் மற்றும் வெண்மை தன்மை குறைந்துவிடும். எனவே குறைந்த செலவில் வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்து பற்களை வெண்மையாக பராமரிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

1) நம் உருவத்திற்கு அடையாளமாக இருக்கும் தலையின் கேசத்திற்கு மட்டுமில்லை, பற்களின் வெண்மைக்கும் பலன்அளிக்கும் ஒரு  சிறந்த பொருள் தேங்காய் எண்ணெய். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை வாயிற்குள் ஊறி, 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி செய்வதால் பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் உங்கள் டூத்பிரஸ்ஸில் தேங்காய் எண்ணெய்யை படரச்செய்து அதை தேயிப்பதாலும் பலன் ஏற்படும்.

2) நோய் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றது தான் ஆப்பிள் சிடார் வினீகர். இதை கையில் எடுத்து பற்களில் சில நிமிடங்கள் தேயிக்க வேண்டும், இப்படி செய்வது வருவதாலும் பற்கள் வெண்மை அடையும்.


3) பொருட்களை சுத்தப்படுவதற்கு உள்ள இயற்கையான பொருட்களில் முக்கியமானது எலுமிச்சை பழம். இதனுடைய தோளை எடுத்து, பற்களில் தேய்த்து அதை கொப்பளித்து துப்ப வேண்டும். இதை ஒரு வார காலம் தொடர்ந்து  செய்து வந்தால் பற்களில் ஏற்படும் மாற்றங்களை உடனே பார்க்கலாம்.

4) நல்ல தரமுள்ள பேக்கிங் சோடாவை  வாங்கி பசையாக மாற்றி, அதை பற்களில் தினமும் தேயித்து கொப்பளித்து வர வேண்டும் இந்த முறைகளை பின்பற்றி வந்தால் பற்களில் வெண்மை பளிச்சிடும்.