1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:13 IST)

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - சிம்மம்

மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாதவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதி குரு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனநிம்மதி கிடைக்கும்.

உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். பிள்ளை பாக்யம் கிட்டும்.
 
புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். மகனுக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். வழக்சில் சாதகமான தீர்ப்பு வரும். 24-ஆம் தேதி வரை யோகாதிபதி செவ்வாய் 5-ல் நிற்பதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்புக் காட்ட வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துப் போகும்.
 
16-ஆம் தேதி வரை ராசிநாதன் சூரியன் 2-ல் அமர்ந்திருப்பதால் கண் வலி, பல் வலி வந்துப் போகும். யதார்த்தமாகப் பேசி சிக்கிக் கொள்வீர்கள். 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்க நிலை மாறும். பண உதவியும் கிடைக்கும்.
 
ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்வது நல்லது. மனைவிக்கு முதுகு, மூட்டு வலி வந்து நீங்கும். அவ்வப்போது உங்களுக்கும் தலைச்சுற்றல், நாக்கில் வறட்சி, மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு வந்துப் போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாயாருடன் வீண் விவாதம் வரும்.
 
கன்னிப் பெண்களே! கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். சிலருக்கு திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். நாலும் தெரிந்த நல்லவர்களின் வழிகாட்டுதலால் இலக்கை தொடும் மாதமிது.