ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக மூல மந்திரம் உண்டு. அமைதியாகவும் தெளிவாகவும் ஆழ்ந்த கவனத்தோடும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய மந்திரங்களை குறைந்தபட்சம் மும்மூன்று முறைகள் உச்சரிக்க வேண்டும். ஒன்பது, 27, 54, 108 முறைகளும் உச்சரிக்கலாம்.
சூரிய மந்திரம்:
ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்.
செம்பருத்திப் பூவின் நிறம் உடையவன்; காச்யபரின் புதல்வன்; மிகவும் பிரகாசம் உடையவன்; இருட்டின் பகைவன்; எல்லாப் பாவங்களையும் அழிப்பவன்; அப்பகலவனைப் பணிகிறேன்.
சந்திர மந்திரம்:
ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்.
தயிர், சங்கு, பனி போன்று வெண்மையானவன்; பாற்கடலிலிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். ஸோமன் என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவன். சிவனது ஜடாமகுடத்தின் அணிகலன். அச்சந்திரனைப் பணிகிறேன்.
செவ்வாய் மந்திரம்:
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்.
பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவன்; மின்னலைப் போன்ற ஒளியினன்; குமாரன்; சக்தி ஆயுதம் தரிப்பவன். அந்த மங்களன் எனும் செவ்வாயைப் பணிகிறேன்.
புதன் மந்திரம்:
ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்.
ஞாழல் மொட்டுப்போன்ற ஒளியுடையவன். உருவத்தின் அழகில் உவமை அற்றவன். சந்திரனின் குமாரன். ஸெளம்யமானவன். அந்த புதனைப் பணிகிறேன்.
குரு மந்திரம்:
தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன்; பொன்னன்; மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன்; அந்தப் பிருஹஸ்பதியை வணங்குகிறேன்.
சுக்கிர மந்திரம்:
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்.
பனி, முல்லை, தாமரை நூல் போன்ற வெண்மையான நிறமுடையவன்; அசுரர்களின் குரு; எல்லாச் சாத்திரங்களையும் உரைப்பவன். பிருகுவின் புதல்வன்; அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன்.
சனி மந்திரம்:
நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்
மை போன்று கறுத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயா தேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்லும் அந்தச் சனியை நமஸ்கரிக்கிறேன்.
ராகு மந்திரம்:
அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்.
பாதி உடல் கொண்டவன்; பெரும் வீரன்; சந்திர சூரியர்களைப் பீடிப்பவன்; அகர ஸ்திரீயின் கர்ப்பத்தில் உதித்தவன். அந்த ராகுவைப் பணிகிறேன்.
கேது மந்திரம்:
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்.
புரசு மரத்தின் பூப்போன்ற செந்நிறம் கொண்டவன். நட்சத்திரங்கள், கிரகங்களில் தலையானவன். கோபி; கோபத்தின் உருவுடையோன். அந்தக் கேதுவைப் பணிகிறேன். இந்த மந்திரங்களை உச்சரிப்பது உங்கள் மனதில் தெளிவை ஏற்படுத்துவதற்காகவும், வாழ்க்கையில் நலம் உண்டாவதற்காகவும் தான் என்பதில் சந்தேகமில்லை.