1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

காயத்ரி மந்திரம் எப்படி தோன்றியது...? இதன் சிறப்புக்கள் என்ன...?

எந்த பூஜை, விரதம், வழிபாடென்றாலும் இந்த காயத்ரி மந்திரத்தினை ஜெபிக்காமல் முழுமை பெறாது. இந்த காயத்ரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர்.

இவர் காயத்தையே (உடலை) திரியாக எரித்து மகா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத  மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர். அவர் ஆகாயத்தில் சூட்சும  ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக்  கண்டறிந்தார்.
 
காயத்ரி மந்திரம்:
 
ஓம் பூர் புவஸ்ஸூவ: தத் சவிதுர்வரேண்யம்: 
பர்கோ தேவஸ்ய தீமஹி: தியோ யோ ந: ப்ரசோதயாத்|.
 
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித  ஆபத்துக்களும் நீங்கும். 
 
மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. இந்த  மந்திரத்தினை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ  செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.
 
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற  மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும்  பயனற்றது.