வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோமதி சக்கரம் பற்றிய பல அரிய தகவல்கள் !!

கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும்.  முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.

வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும் போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து  ஆசீர்வதிப்பது வழக்கம்.
 
கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.
 
ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால்  அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. 
 
மனித உடலில் அவை கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து  செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.
 
கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும்.  காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.