புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா?

புல்லாங்குழல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருபவர் கிருஷ்ணர்  தான். அத்தகைய புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. இதிலிருந்து வெளிவரும் இசை மனதில் உள்ள கஷ்டங்களை இல்லாமல் செய்து விடும்.
வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது நல்லதா? மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா? போன்ற சந்தேகங்கள் எழும். புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால் என்ன நடக்கும்?
 
புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் உள்ள எதிர் மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு ஓடி விடும். இதற்கு காரணம் அந்த புல்லாங்குழல் மூங்கில் கொண்டு செய்யப்படுவது தான் காரணம்.
 
குடும்ப ஒற்றுமையை வலிமையாக்கும். மற்றும் வீட்டில் அமைதியான சூழல் உருவாகும் என்று நம்பப்படுகின்றது. கிருஷ்ண பகவானின் கையில் இந்த இசைக்கருவி இருப்பதனால் இதனை ஒரு புனிதமான பொருளாகவே கருதுகின்றது.
 
முக்கியமாக வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்போரிடம் அன்பும் காதலும் அதிகரிக்கும். இதற்கு புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால் வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்ற நம்பிக்கைதான் காரணம், ஆனால் அது ஒரு மூட  நம்பிக்கை.
 
கிருஷ்ணரின் இணைபிரியாத அம்சம்தான் புல்லாங்குழல். எனவே எவ்வித அச்சமும் இன்றி புல்லாங்குழல் வைத்திருக்கும் கிருஷ்ணரை  வீட்டில் வைக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :