ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

வைகாசியில் சிறப்பான விசாக நட்சத்திரம்....!

வைகாசி விசாகம் முருகனுக்கு உகந்த நாளாகும். மாதந்தோறும் வரும் பெளர்ணமி சிறப்பானது. இவை இரண்டும் சேர்ந்து வரும் நாள் இன்று. அது மட்டுமல்லாமல் அக்கினி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி. அதாவது அக்கினி நட்சத்திரம் நிறைவு நாள்.
வைகாசியில் வரும் விசாக நட்சத்திரம் மிக மிகச் சிறப்பான உன்னதமான நாள். இந்த நாளில் முருக வழிபாடு செய்வதும் முருகன் கோயிலுக்குச் சென்று செவ்வரளி மாலை சார்த்துவதும் மிகுந்த பலனைத் தரும். முடிந்தால் எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழங்கலாம்.
சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் பெளர்ணமி வருவது இன்னும் சிறப்புக்கு உரியது. எனவே வீட்டில் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள். பூஜையறையிலும் வாசலிலும் விளக்கேற்றிவைத்து வழிபடுங்கள். வீட்டின் தரித்திரம் அகலும். ஐஸ்வர்யம் குடிகொள்ளும். தடைப்பட்ட  மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் தங்கும்.