புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா...?

கோவிலுக்குள் மனித உடலில் இருக்கக்கூடிய குணங்களைப் பிரித்துக் காட்டுகின்றார்கள். தீபத்தைக் காட்டுகின்றார்கள். அந்த வெளிச்சத்தில் அங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் தெரிகின்றது.
கற்பூரத்தை வைத்துத் தீபாராதனை காட்டும் பொழுது வெளிச்சமும் வருகின்றது. மனித உடலுக்குள் சில அசுர குணங்களை அழிக்கக்கூடிய  சக்தியும் அதில் இருக்கின்றது என்பது மெய் ஞானிகளால் கண்டுணர்ந்த நிலை.
 
எண்ணெயை ஊற்றி விளக்கைக் காட்டுவதற்கும் இந்த கற்பூரத்தை வைத்துக் காட்டுவதற்கும் உண்டான வித்தியாசம் கற்பூரம் உடலிலுள்ள சில  கிருமிகளைக் கொல்லக் கூடிய ஆற்றல் பெற்றது.
கற்பூரத்தை ஆராதனையாகக் காட்டும் பொழுது அந்த மணத்தை நுகர்ந்தால் உடலில் புழு இருந்தால் அது செத்துப் போகும். அன்றைக்குத் தத்துவ ஞானிகள் இதைப் பழக்கமாகச் செய்யச் சொன்னார்கள்.
 
விஞ்ஞான ரீதியாக உருவாக்கும் கற்பூரத்தை வாங்கி அதைக் காட்டினால் மனிதனுக்கு நிச்சயம் நோய் வரும். அன்றைக்கு உருவாக்கிய  கற்பூரம் வேறு. இன்றைக்கு உருவாக்ககும் கற்பூரம் வேறு.
 
தீபாராதனை காட்டும் பொழுது அந்த தீப ஒளிச் சுடரை உற்றுப் பார்த்து அதிலிருந்து வெளிப்படும் மணங்களை நாம் நுகர்கின்றோம். கண்ணால்  பார்க்கின்றோம். புலன்களால் நுகரும் ஆற்றலும் வருகின்றது. நம்மை அறியாமலே இந்த உணர்ச்சிகள் உள்ளே போகின்றது. உடலிலுள்ள  விஷக் கிருமிகளை அடக்குகின்றது. இதெல்லாம் அன்று தத்துவ ஞானிகள் செய்த நிலைகள்.
 
மனித வாழ்க்கையில் நாம் கண்ணில் பார்ப்பது துவைதம். மறைமுகமாகக் கண்ணுக்குப் புலப்படாதது அத்வைதம். ஆனால் அதை நுகரப்படும் போது நமக்குள் உணர்ச்சிகள் தூண்டுகின்றது அது விசிஷ்டாத்வைதம்.
 
கற்பூரத்தை எரித்தவுடனே அந்த வாசனை தெரிகின்றது. அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றவுடனே தீமைகளை அடக்கும் சக்தியாக வருகின்றது “துவைதம்..” நமக்குள் இந்த உணர்வுகள் இயக்கும் போது விசிஷ்டாத்வைதம்.