வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (18:17 IST)

ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் : மீனம்

பொதுவுடைமைவாதிகளே! 2-ஆம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் குருபகவான் 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பிகள் பக்கபலமாக இருப்பார்கள்.

அவர்களை பயன்படுத்தி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவிக்கு இருந்து வந்த ஹார்மோன் பிரச்னை, வயிற்று வலி, இரத்த சோகை விலகும். புது சொத்து வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
 
ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் விடாமுயற்சியால் போராடி எடுத்த வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். 17-ஆம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் அரசு வாரிகங்கள் நல்ல விதத்தில் முடியும். புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
 
புதன் 6-ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, ஒற்றை தலை வலி வந்துப் போகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வந்துப் போகும். 25-ஆம் தேதி வரை சுக்ரனும் 6-ல் மறைந்திருப்பதால் வீடு பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் அடைப்பு, மின்சாரக் கோளாறு என்றெல்லாம் அடிக்கடி வந்துப் போகும். மனைவியுடன் வாக்குவாதங்கள் வரும். சந்தேகத்தால் சின்ன சின்ன பிரிவுகள் ஏற்படக்கூடும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். ஆரோக்யம் சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொண்டு புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். எதிர்பார்த்த புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும், சமயோஜித புத்தியாலும் வெற்றி பெறும் மாதமிது.