திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. குடியரசு தினம்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜனவரி 2018 (08:26 IST)

குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 4வது வரிசை - காங்கிரஸ் அதிருப்தி

டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தினவிழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 4வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.

 
மத்திய அரசின் சார்பில் நடைபெறும் விழாக்களில் எப்போது எதிர்கட்சி தலைவர் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தனி அந்தஸ்து வழங்கபடுவது வழக்கம்.  
 
இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் 69வது குடியரசு தினம் கொண்டாப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தி இந்த விழாவில் கலந்து கொள்கிறார். ஆனால், அவருக்கு 4வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரை அவமானப்படுத்தும் நோக்கத்திலேயே பாஜக இப்படி செயல்பட்டுள்ளது என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், குடியரசு விழாவில் ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வதால், அவர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக பாஜக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.