திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:59 IST)

ஏழரை சனியின் பிடியை விலக்கி நலம் தரும் புரட்டாசி விரதம்!

Sani Bhagavan
புரட்டாசி விரதம் பெருமாளுக்கு உகந்த நாளாக விரதம் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆனால் புரட்டாசியில் பெருமாளை வணங்குவது மட்டுமல்ல, சனி பகவானையும் வணங்குவது சனி தோஷங்களை விலக்கி சகல சௌபாக்கியங்களையும் வழங்கும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.



புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிப்பட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும். ஏன் என்றால் புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார் என்பது நம்பிக்கை.

புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நமக்கு தாயார் மற்றும் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளும் முழுமையாக கிடைக்கும்.
அதோடு சனி தோஷம் இருப்பவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

மேலும் அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை மனதார வழிபடுவதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவீர்கள்.

இதுமட்டுமில்லாமல் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்சனைகளும் படி படியாக தீர்ந்து செல்வம் செழிக்கும். வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடி மகிழ்ச்சி கொழிக்கும்.

Edit by Prasanth.K