1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (08:27 IST)

இன்று ஆடி அமாவாசை; ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்! – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Agni theertham
இன்று ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில் அமாவாசையும் வருவதால் தர்ப்பணம் கொடுக்க மக்கள் பலரும் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.



அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் தர்ப்பணம் கொடுப்பதும் புண்ணிய காரியமாக இருந்து வருகிறது. ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது காலம் காலமாக இருந்து வரும் இந்து மத சடங்காகும்.

இன்று ஆடி மாதம் முதல் நாளே அமாவாசையும் சேர்ந்து வந்துள்ளது. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் மக்கள் பலரும் குவிந்துள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் தொடர்ந்து வருகை தந்துக் கொண்டிருக்கும் நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K