Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எந்த தெய்வத்தை எந்த கிழமையில் வழிபடுவது??

வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (12:56 IST)

Widgets Magazine

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


 
 
திங்கள்: 
 
திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும். திங்கள் நீலகண்டனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. திங்களன்று சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைத்திடலாம். 
 
செவ்வாய்: 
 
ஹனுமரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும், துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை வளம் பெரும்.
 
புதன்: 
 
விநாயகரை விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டுதான் தொடங்கவேண்டும். 
 
வியாழன்: 
 
விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாள். 
 
அதேபோல வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி (குரு) வழிபட உகந்த நாளாகும். 
 
வெள்ளி: 
 
துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.
 
சனி: 
 
சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபடலாம்.
 
ஞாயிறு: 
 
நவகிரகத்தின் முதன்மையான கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும் என நம்பப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கோவிலுக்கு நகை அணிந்து செல்வது நல்லது: ஏன் தெரியுமா?

கோவில்களுக்கு தங்க நகைகள் அணிந்து செல்வது அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் ஆகிய மூன்று ...

news

காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்க வேண்டும்: ஏன் தெரியுமா?

காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கும் படி வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுறுத்துவதை ...

news

வாழ்க்கையில் மனிதனுக்கு 5 விதமான தோஷங்கள் பற்றி...

பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, ...

news

வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

ஒருவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ...

Widgets Magazine Widgets Magazine