1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (23:37 IST)

ஈஐடி பாரி சக்கரை ஆலையில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம்

Factory
புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஈஐடி பாரி சக்கரை ஆலையில் இரண்டாவது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
 
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ஈஐடி பாதையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ள அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மீண்டும் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து தொழிற்சாலைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றனர்.
 
இன்று மாலை சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் ஈஐடி பாரி ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.