ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (20:48 IST)

பெண்ணை ரகசிய கேமராவில் படம் பிடித்த நபர் ! பகீர் சம்பவம்

திருச்சியைச் சேர்ந்தவர் ரோசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர் தற்போது புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.
அதில், நான் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தேன். அங்கு  கோட்டையில் ஒரு வீட்டில்  வாடகைக்கு குடியிருந்தேன். அதனால் அருகேயுள்ள மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்குஅடிக்கடி  செல்வேன். அப்போதுதான்  அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. 
பின்னர் நாங்கள் இருவரும் காதலித்தோம். இதனைத்தொடர்ந்து  டவுன்ஹால் ரோட்டில் ஒரு  குடியிருப்பை தேர்வு செய்து என்னை அவர் குடிவைத்தார்.
இந்நிலையில் ஒருநாள் வீட்டின் ஜன்னலில் கேமரா ஒன்று பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காதலரிடம் கேட்டபோது, நான் உன்னைத் திருமணம் செய்ய வேண்டுமானால் நீ என்னிடம் கெஞ்ச வேண்டும் என்று கூறினார்.
மேலும், நீ என்னிடம் கெஞ்சாவிட்டால் ...ரகசிய கேமராவில் நான் உன்னைப் படம் பிடித்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்துநான் கோட்டையிலுள்ள போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தும் இன்னும் விசாரனை நடந்தவில்லை. எனவே மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவைப் படித்துப் பார்த்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் காவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Dailyhunt