புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (20:54 IST)

பெண்ணிடம் பேசியபடி நைசாக நகையை திருடிய ஆண்கள் ! வைரல் புகைப்படம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள சின்னய்யா தெருவில் ஆர் கே பி என்ற பிரசித்தி பெற்ற ஒரு நகைக்கடை இயங்கி வருகிறது.இங்கு கடந்த 10 ஆம் தேதி இரு ஆண் வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதற்க்காக வந்துள்ளனர்.
அப்போது கடையில் வேலை செய்யும் பெண், இருவருக்குன் நகைகளின்  டிசைன்கள காண்பித்துள்ளார். இடையிடையே பணிபெண்ணிடம் பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு,சட்டென மேஜையில் இருந்த 5 சவரன் மதிப்புள்ள 4 தங்க டாலர்களை  திருடிக்கொண்டனர்.
 
அந்தப் பணிப்பெண் மீண்டும் அவர்களிடம் வந்த போது, பின்னர் வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.
 
அப்போது பணிப்பெண் நகைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கிற போது, நகைகள் குறைந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே முதலாளிக்கு தகவல் தெரிவித்து, போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் , கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்து  , அதில் உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.