திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (11:50 IST)

பெண்ணின் உயிரைப் பறித்த நாய்..! வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலி.!!

மார்த்தாண்டம் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால், ஸ்கூட்டரில் சென்ற பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து, படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள பெத்தேல்புரம் படு வாக்கரையை சேர்ந்தவர் ஜாண் சுஜன்லால். இவருடைய மனைவி பிரபா செலின் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு தனது ஸ்கூட்டரில் மார்த்தாண்டம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் பிரபா செலின் நிலை தடுமாறி ஸ்கூட்டரிலிருந்து  கீழே விழுந்தார். அவருக்கு இடது கால், இடது கண் புருவம், தலை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.  அங்கிருந்தவர்கள் அவரை  மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பிரபா செலின் பரிதாபமாக  இறந்தார். இதுபற்றி மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.