தொடர்புடைய செய்திகள்
- 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் - தயார் நிலையில் இந்திய ராணுவம்!
- நைட்டு டூ மார்னிங்: விடிய விடிய கரையை கடக்கும் நிவர்!!
- செம்பரம்பாக்கம் நீர் செல்லும் 6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
- நிவர் புயல் பாதிப்பு –சென்னை உதவி எண்கள் அறிவிப்பு!
- பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: தடா போட்ட உதயநிதி!!
இன்று பொது விடுமுறை… டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?
நிவர் புயல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகளை சூழலுக்கு ஏற்ப மூடினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் வலுவடைந்துள்ளதால் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சுற்றுவட்டார மாவட்டங்களில் 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் எச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடுவது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. டாஸ்மாக் கடைகளை திறக்க மாவட்ட ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு ஏற்ப மூட மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
