புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (14:11 IST)

கணவனுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசம் இருந்த மனைவி

திருச்சி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் கூலித் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் முசிறியை அடுத்த சிந்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்று தெரியவந்தது.
 
அதன் பின்னர் இக்கொலை பற்றி அவரது மனைவி செல்வியிடம்  போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான விதத்தில் பதில் பேசியுள்ளார். பிறகு போலீஸாரிடம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
 
செல்வி கூறியுள்ளதாவது :
எங்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். எனக்கு பக்கத்து வீட்டி, வசிக்கும் தங்கதுரை என்பவருடன் தகாத பழக்கம் ஏற்பட்டது. அதனால் தினமும் கணவன் அருந்தும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு நானும் தங்கதுரையும் உல்லாசமாக இருப்போம்.
ஆனால் நானும் தங்கதுரையும் உல்லாசமாக இருப்பதை கணவர் ஒருமுறை பார்த்துவிட்டார். இதனையடுத்து கணவர் கோவிந்தராஜ் என்னிடம் சண்டையிட்டார். 
 
இதனையடுத்து நானும் தங்கதுரையும் கணவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினோம்.
ஒருநாள் இரவில் கணவர் வாயில் துணியால் கட்டி, இரும்புக் கம்பியால் கழுத்தில் குத்தியும், அம்மிக் கல்லைத் தலையில் போட்டு கொலைசெய்தோம். பின்னர் இறந்த கணவனின் உடலை வனப்பகுதிக்குக் கொண்டு சென்று வீசிவிட்டோம் என்று செல்வி கூறியுள்ளார். 

இதனையடுத்து போலீஸார் செல்வியை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.