வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (14:36 IST)

மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய வைகோ, ராஜபக்சேவுக்கு ஏன் காட்டவில்லை?

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ஓடி ஓடி கருப்புக்கொடி காட்டி வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டாதது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ராஜபக்சேவுக்கு பெங்களூரை சேர்ந்த தமிழ் அமைப்புகள் கருப்புக்கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்

இந்த நிலையில் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் வைகோ, லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவுக்கு பெங்களூர் சென்று ஏன் கருப்புக்கொடி காட்டவில்லை? என்ற கேள்வியை நெட்டிசன்கள் சமூக வ்லைத்தளங்களில் எழுப்பியுள்ளனர். நெட்டிசன்களின் இந்த கேள்விக்கு வைகோ விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது