ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (15:43 IST)

பாஜக அலுவலகத்தில் இருந்தும் குஷ்பு இணைப்பு விழாவிற்கு வராத ஜேபி நட்டா: என்ன காரணம்?

பாஜக அலுவலகத்தில் இருந்தும் குஷ்பு இணைப்பு விழாவிற்கு வராத ஜேபி நட்டா
நடிகை குஷ்பு இன்று மதியம் பாஜகவில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார் என்பதும் அவருக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக ’சகோதரி குஷ்புவை வருக வருக என வரவேற்கிறேன்’ என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்த குஷ்பு ஒரு சில நிபந்தனைகள் விதித்ததாகவும் அதில் பிரதமர் மோடி, அமித்ஷா அல்லது ஜேபி நட்டா ஆகிய மூவரில் ஒருவரின் முன்னிலையில்தான் தான் பாஜகவில் இணைவேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன் குஷ்பு பாஜகவில் இணைவார் என்று செய்திகள் வெளிவந்தது. அதேபோல் ஜேபி நட்டா அவர்களும் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். குஷ்புவை அவர் வரவேற்கும் விதமாக சில வார்த்தைகள் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக அலுவலகத்தில் இருந்தும் அவர் குஷ்பு இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை 
 
பாஜகவின் தேசிய செயலாளர் ரவி முன்னிலையில்தான் குஷ்பு இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக அலுவலகத்தில் இருந்தும் கடைசி நேரத்தில் திடீரென குஷ்பு இணைப்பு நிகழ்ச்சியில் ஜேபி நட்டா கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்த மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது