ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (13:28 IST)

பாஜக அலுவலகம் வந்த குஷ்பு: இன்னும் சில நிமிடங்களில் ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பு!

நடிகை குஷ்பு இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய நிலையில் அவர் தற்போது ஜே.பி.நட்டாவை சந்திக்க பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
 
இன்னும் சில நிமிடங்களில் பாஜக அலுவலகத்தில் நடிகை குஷ்பு பாஜக தேசிய தலைவர் 
ஜே.பி.நட்டாவை சந்திக்கவிருப்பதாகவும், சில நிமிடங்கள் இருவரும் பேசியபின் குஷ்பு அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைவார் என்றும் டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பாஜக வெளியிடவிருப்பதாகவும், கட்சியில் சேர்ப்பது மட்டுமின்றி குஷ்புவுக்கு பாஜகவில் பதவி அளிப்பது குறித்த அறிவிப்பும் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது