நாம் தமிழர் நிர்வாகி அதிரடி கைது: கருணாநிதி குறித்து வதந்தி பரப்பியதாக குற்றச்சாட்டு

Last Updated: திங்கள், 30 ஜூலை 2018 (15:31 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த மூன்று நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி மீண்டும் தொண்டர்கள் முன் காட்சியளிக்க வேண்டும் என்று கோடிக்கணக்கான திமுக தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து ஒருசில விஷமிகள் சமுக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியினர் யாரும் சமூக வலைத்தளங்களில் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ய கூடாது என்றும் அவ்வாறு பதிவு செய்பவர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.


இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்ற பகுதியில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீனதயாளன் என்ற 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :