1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 மே 2020 (08:20 IST)

ஜூன் இறுதியில் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. 12-ஆம் வகுப்பு தேர்வுகள் கிட்டத்தட்ட முடித்து விட்டாலும் அந்த தேர்வு தாள்கள் இன்னும் திருத்தப்படாமல் உள்ளதால் தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை 
 
அதேபோல் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இன்னும் பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இந்த பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த ஆலோசனையில் கல்வித்துறை உள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் ஜூன் இறுதியில் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் பள்ளிகளை திறக்க சொல்லி அறிவுறுத்தும் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஜூன் இறுதியில் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மாணவர்கள் இருப்பதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியுமா? என்பது குறித்து கல்வித்துறையினர் ஆலோசனை செய்து வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு முழு அளவில் உறுதி செய்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது