1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 மே 2020 (07:57 IST)

உலக அளவில் 33 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் ஒரு லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் தற்போது வெளி வந்த தகவலின்படி உலகம் முழுவதும் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகம் முழுவதும் சுமார்  100 நாடுகளுக்கும் மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால்ல்  33,04,140 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், உலக அளவில் கொரோனாவால் இதுவரை மொத்தமாக 233,829 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,039,055 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2201 பேர் உயிரிழந்துளதாகவும், கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 10,95,019 பேர் பாதிக்கபப்ட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தூள்ளது. அதேபோல் ஸ்பெயினில் 239,639 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் 24,543 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், இத்தாலியில் 205,463 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் 27,967பேர்கள் பலியாகியுள்ளதாகவும், இங்கிலாந்தில் 171,253 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் 26,771 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், பிரான்ஸில் 167,178 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் 24,376 பேர்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது