திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (14:23 IST)

நடைபாதையில் பைக்கில் வந்த நபரை ’விளாசிய மூதாட்டி’ ! வைரலாகும் வீடியோ

சென்னை மாநகரில் மக்கள் நெரிசலுக்கும், போக்குவரத்துக்கு நெரிசலுக்கும் என்றும் பஞ்சமே இருந்ததில்லை. எங்கெங்கு காணிணும் சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் கடைகள் போட்டு இடத்தை ஆக்கிரமிரப்பு செய்துள்ளதால் மக்கள் செல்வதற்கு பெரும் இடையூராக உள்ளது.
நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதால், சாலையில் மக்கள் செல்லும் நிலை உருவாகிறது. இதனால் விபத்துகளும் நேருகிறது.
 
இந்நிலையில் இன்று சென்னை அஷோக் பில்லர் அருகே நடைபாதையில் பைக்கில் வந்த இளைஞரை, அங்கு வந்த மூதாட்டி ஒருவர் திட்டி சாலையில் செல்லச் சொல்லும் காட்சிகள் தற்பொழுது வைரலாகிவருகிறது. தவற்றை சரியான நேரத்தில் கண்டித்து உணர்த்திய மூதாட்டிக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாகிவருகிறது.