வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (10:39 IST)

தயாரிப்பில் நஷ்டம், கைமீறிய கடன்... தரைமட்டமாகும் பாலா அமீர் இல்லம்

கஞ்சா கருப்பு போரூரில் வசித்து வந்த பாலா அமீர் இல்லம் தற்போது இடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து போரூரில் ஒரு வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு சினிமாவில் தனது குருநாதர்களாக இருந்த இயக்குனர் பாலா மற்றும் அமீரின் பெயரையே சூட்டினார். 
 
ஆனால், இடையில் கஞ்சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இதில் பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டார். பண விஷயத்தில் தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக கூறி கடன் தொல்லையில் இருந்து விடுபட வீட்டை விற்றார். 
அந்த இடத்தில் தற்போது அடுக்குமாடி கட்டிடம் ஒன்று வரப்போகிறதாம். எனவே, கஞ்சா கருப்பின் பாலா அமீர் இல்லம் தற்போது இடிக்கப்பட உள்ளதாம். இதற்கான பணிகளும் துவங்கிவிட்டதாம். 
 
வீட்டை விற்றிருந்தாலும், வீடு இடிக்கப்படுவதை அறிந்து கஞ்சா கருப்பு மனம் நொந்து அழுததாக அவரது நெந்ருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.