இன்று பகலிலும் மழை வெளுத்து வாங்கும் - வெதர்மேன் தகவல்


Murugan| Last Modified புதன், 1 நவம்பர் 2017 (12:50 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடலோர மாவட்டங்களில் இன்று பகலிலும் நல்ல மழை பெய்யும் என வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 

 
இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
கடலோர டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. மேகங்கள் மெதுவாக உள்நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால், லேசாக தொடங்கும் மழை ஒரு சில இடங்களில் கனமழையாக பொழியும்.  


 

 
புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையில் பிற பகுதிகளில் இன்று மிதமான மழை இருக்கும். மேகங்கள் நிறைய அடுக்காக இருப்பதை பார்க்கும் போது, நேற்று போல் இல்லாமல் இன்று பகலிலும் கனமழை பெய்யும். முக்கியமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும்” என அவர் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :