1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (20:05 IST)

தங்கத்தின் விலையை முந்திய தண்ணீரின் விலை: அதிர்ச்சியில் சென்னை மக்கள்

சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் கஷ்டம் இருப்பது தெரிந்ததே. தண்ணீர் கஷ்டம் இல்லாத காலத்திலேயே காசு கொடுத்து கேன் வாட்டர் வாங்கி குடிநீருக்காக பயன்படுத்திய சென்னை மக்கள், தற்போது அனைத்து தேவைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றனர்.
 
கடந்த சில வாரங்களுக்குமுன் ஒரு லாரி தண்ணீர் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக விலை ஏறி ரூ.5ஆயிரம் என்ற நிலைக்கு வந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலையே ரூ.3300 என்றுதான் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட ஒரு லாரி தண்ணீரில் விலை அதிகரித்திருப்பது வரலாறு காணாத நிலை ஆகும். இப்படியே போனால் தண்ணீருக்கு என ஒரு பெரிய பட்ஜெட்டை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே தண்ணீர் பிரச்சினையால் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிசெய்யும்படி கூறியுள்ளனர். அதேபோல் பெரிய ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்தும் அளவுக்கும்,  தண்ணீர் பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது. அனைத்து உயிர்களும் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்சனையை அரசு தீர்க்காவிட்டால் இந்த் பிரச்சனை மிகப்பெரிய அளவில் அரசுக்கு திரும்பும் ஆபத்தும் உள்ளது