வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (10:53 IST)

தண்ணீர் பிரச்சனை: ஓட்டல்கள், ஐடி நிறுவனங்களை அடுத்து பள்ளிகளும் மூடப்படுமா?

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருசிலர் பெங்களூர், ஐதராபாத் கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தி வதந்தி என்றும் ஒருசில பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனைகள் இருப்பது உண்மைதான் என்றாலும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக பள்ளிகள் விடுமுறை அளிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தே குடிநீர் கொண்டு வர அறிவுறுத்தப்படுள்ளதாகவும், பள்ளிகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனைக்கு பெற்றோர் ஆசிரியர் கழம் மூலம் தீர்வு காணப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் மேலும் அறிவித்தார். அதுமட்டுமின்றி பள்ளிகளில் உள்ள தண்ணீர் பிரச்சனை குறித்து ஜூன் 17 ஆம் தேதி முதல் அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், தண்ணீர் பிரச்சனை குறித்து பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.