Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி!

நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி!

வெள்ளி, 6 அக்டோபர் 2017 (09:36 IST)

Widgets Magazine

குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கில், நேற்றைய விசாரணையில் நடிகர் ஜெய் ஆஜராகாததால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 
 
சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய், கடந்த மாதம் 21-ஆம் தேதி குடி போதையில் தன்னுடைய விலை உயர்ந்த ஆடி காரை அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
 
அவருடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார். யாருக்கும் அடிபடவில்லை என்றாலும், போதையில் இருந்ததால் அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. ஜெய் ஏற்படுத்திய விபத்து குடிபோதையில் நடைபெற்றது என்பதால் எவ்வித சமரசமும் இல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து கைது செய்து ஜாமீனில் விடுவித்தது காவல்துறை.
 
அந்த வழக்கின் விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விசாரணையின்போது ஜெய் நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிகையின் நகலைப் பெற்றுக் கொண்டார். மீடியாவில் சிக்க கூடாது என்பதற்காக முன்னதாகவே யாருக்கும் தெரியாமல் நீதிமன்றத்திற்கு வந்த ஜெய், தன்னுடைய காரில் காத்திருந்தார்.
 
மீடியாக்கள் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பிறகு வேகமாக நீதிமன்றத்திற்குள் சென்று, குற்றப்பத்திரிகையின் நகலை வாங்கி உடனே காரில் ஏறி சென்றுவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை, நேற்றும் நடைபெற்றது.
 
ஒரு சினிமா நட்சத்திரத்துக்கு நீதிமன்றம் என்ன தண்டனை வழங்க உள்ளது என்பதை தெரிந்துகொள்ள ஊடகங்கள் நேற்று ஜெய் வரும் முன்னரே காத்திருந்தன. ஆனால் நடிகர் ஜெய் கடைசி வரை வராமலே போனார். இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் ஜெய் ஆஜராகாத்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சசிகலாவுக்கு இன்று பரோல்: அரசியல் தலைவர்களை சந்திக்க தடை?

கடந்த சில தினங்களாக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த சசிகலாவுக்கு சென்னை மாநகர காவல்துறை ...

news

ஒரு கிராமம் முழுக்கவே பிழையான ஸ்மார்ட் கார்ட்: பொதுமக்கள் அதிர்ச்சி

ரேசன் கார்டுக்கு பதிலாக தமிழக அரசு வழங்கி வரும் ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் உள்பட பல ...

news

அடுத்த தேர்தலில் மோடிக்கு பதில் யோகி பிரதமர் வேட்பாளரா?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், மேற்குவங்கம் தவிர இந்தியா முழுவதும் மோடி அலை ...

news

ஒருவருக்குத்தான் தாலி கட்ட முடியும், ரெண்டு பேருக்கு எப்படி தாலி கட்டுவது? மன்சூர் அலிகான்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை ...

Widgets Magazine Widgets Magazine