1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (06:00 IST)

ஒரு கிராமம் முழுக்கவே பிழையான ஸ்மார்ட் கார்ட்: பொதுமக்கள் அதிர்ச்சி

ரேசன் கார்டுக்கு பதிலாக தமிழக அரசு வழங்கி வரும் ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் உள்பட பல புகைப்படங்கள் மாறி மாறி இருப்பது குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு கிராமம் முழுக்கவே பிழையான ஸ்மார்ட்கார்ட் வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது



 
 
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை என்ற கிராமத்தை சேர்ந்த சுமார் 360 பேர்களின் ஸ்மாட்கார்டுகளில் மேலப்பசலை என்பதற்கு பதிலாக மேலப்பிடாவூர் என்கிற முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கிராமத்து மக்கள் ஸ்மார்ட்கார்டை வாங்க மறுத்துவிட்டனர்.
 
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறியபோது, 'ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் குறைந்துவிட்டது. உளுந்து வழங்வது இல்லை. சீனி, அரிசி பாமாயில் எதுவுமே மாதந்தோறும் வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் சிவப்பு கலர் பருப்பு போடுறாங்க. அந்தப் பருப்பைச் சாப்பிட்டால் மூட்டுவலி வருமாம். ஆக எங்களுக்கு எந்தப் பொருளும் ஒழுங்காக வழங்காத நிலையில் ஸ்மார்ட் கார்டு இப்படி வழங்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று ஆதங்கத்துடன் கூறினார்.