வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:35 IST)

’கோட்டைக்கு ரெடியாவாரா ’இல்லை ’சினிமா ’பேட்டைக்கு’ ரூட்டா : ரஜினி என்ன செய்வார்..?

ரஜினியின் செல்வாக்கு  எப்போதும் எகிறிக்கொண்டுதான் இருக்கிறது.அதை தேர்தலுக்கான ஓட்டுக்காக முழு வீச்சில் தயாராகி விட்டார். ஆனால் அவரது அரசியல் அரைகூவல் தொடங்கி நாளையுடன் ஒரு வருடம் ஆகப் போகிறது. இன்றும் கூட சினிமாவுக்கு முக்கியத்துவம் மட்டுமே கொடுத்து வருகிறார். அதேசயம் தனக்கு என ஒரு கொள்கைபாடு இல்லாமல் திணறுகிறார். 

வேளைக்கு ஒரு மாதிரி பேட்டி கொடுத்து அவரது ரசிகர்கர்களை கடுப்பேற்றுகிறார். அவர் என்ன சொன்னாலும் ரசிப்பதற்கு ரசிகர்கள் இருந்தாலும் நாடு ,மொழி அரசியல் என்று வருகிற போது ரசிகர்களும் மக்களின் அங்கம் தான் என்பதை புகழ்பெற்ற அரசியல் வாதிகளுக்கும் அவர்கள் ’பாடம் எடுத்துள்ளார்கள்’ என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.
 
பாஜகவுக்கு ஆதரவாக இருப்பார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதற்கும் சரியாக ரஜினியிடம் பதிலில்லை. அறிஞர் அண்ணா பேரறிஞர் என்றால் கருணாநிதியும் எம் ஜிஆரும் அவரிடம் அரசியல் பாடம் படித்தவர்கள். அல்லாமல் அனுபவ பாடத்திலும் தோய்ந்தவகள் அரசியல், சினிமா  இரண்டிலும் தடம் பதித்து வெற்றி அடைந்தவரகள்.

இத்தனைக்கும் சிறு வயதிலேயே அரசிலிலுல் கால் பதித்து பல நுட்பங்களை  பயின்றவர்கள். அப்படி பட்டவர்கள் தங்களால் உடலுக்கு இயலாமல் போன போதுதான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். முக்கியமாக ஆளுமையின் முழு உருவமாக திகழ்ந்தார்கள். ரஜினி அவர்களை போல வர ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன் தன்னை தயார் செய்துகொள்ளவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும். 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வர் போட்டி இடுவதும் கூட்டணி வைக்க முடிவு செய்வதும்  நடந்து முடிந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவுக்கப்பட உள்ள ஐந்து மாநில நிலவரங்களை பொறுத்தே அமையும். பார்போம் ரஜினி அப்போதாவது கமலைப்போல முழு அரசியலில் ஈடுபடுவேன் என்று அறிப்பாரா என்று. ஏனேன்றால் ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் இருக்கக்கூடாது என்பது கமலுக்கு புரிந்தது,  45 வருட சினிமா அனுபவ அறிவு கொண்ட ரஜினிக்கு தெரியாதா என்ன...?