சினிமா வாய்ப்பு கேட்டுவரும் பெண்களிடம் உல்லாசம்: ஆதாரத்துடன் பிரபல இயக்குனர் மீது புகார்

Last Updated: புதன், 5 டிசம்பர் 2018 (14:00 IST)
தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த காஸ்டிங் இயக்குனர் மோகன் என்பவர் மீது, பெண் ஒருவர் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன்  பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பலர் மீது, நடிகை ஸ்ரீரெட்டி இது தொடர்பாக புகார் அளித்து திரையுலகினரை அதிர்ச்சி  அடைய வைத்தார். தற்போது மிடூவை பயன்படுத்தி சில பெண்கள், ஆண்களுக்கு எதிராக தங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை  பயன்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர்களை தேர்ந்தெடுக்கும் காஸ்டிங் இயக்குனர் மோகன் என்பவர் மீது பெண் ஒருவர், பாலியல் புகார்  தெரிவித்துள்ளார். ஆடியோ மூலம் தெரிவித்துள்ள புகாரில், 'காஸ்டிங் இயக்குனரான மோகன், தன்னுடைய தோழி மற்றும் பல பெண்களையும்  பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 'வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆசை வார்த்தைக் கூறி  மோகன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், அப்பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்த வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் கூறி  மிரட்டியுள்ளார். இதனை வெளியில் சொன்னால், அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று கூறி மோகன் மிரட்டியதாக'  அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். 
 
தான் கொடுத்துள்ள அந்த புகாருக்கு ஆதாரமாக, மோகன் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த வீடியோக்கள் மற்றும் ஆதாரங்கள்  அனைத்தையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிடுவதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால்  பாதுகாப்பு கருதி, அந்த பெண் பெயர் சொல்ல மறுத்து விட்டார். இது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில்  வைரலாகியுள்ளது. 
 
காஸ்டிங் இயக்குனர் மோகன் பிரபல நடிகர், நடிகைகளின் படங்களுக்கு வேலை பார்த்துள்ளதால், இந்த புகாரில் இவர் சிக்கினால், இவருடன் தொடர்புடைய பல பெரும் சினிமா புள்ளிகளும் சிக்க வாய்ப்புள்ளாதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :