விஷால் போட்டியிடுவதால் என்ன நடக்கும்? திருமாவளவன் கருத்து

Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (19:45 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீரென விஷால் களமிறங்கியுள்ளதால் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் பரபரப்பு அடைந்துள்ளன.

நேற்று விஷால் போட்டியிடுவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் அதிமுக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர், தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் கருத்து கூறிய நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிடுவதால் வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும், வெற்றி பெற முடியாது. நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றி பெறுவது உறுதி என்று திருமாவளவன்  கூறியுள்ளார். ஒரே ஒரு அறிவிப்பில் அரசியல் கட்சிகளை அலற வைத்த விஷால் வெற்றி பெற வேண்டும் என்பதே நடுநிலை வாக்காளர்களின் எண்ணமாக உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :